
தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரியம், மதுரை மண்டல அலுவலகம் மற்றும் நேரு யுவகேந்திரா, இணைந்து ஒரு நாள் இளைஞர் நலன் குறித்த பயிற்சி முகாமை மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் நடத்தியது.
முகாமை கல்வி முதல்வர் டாக்டர் கோமதி துவக்கி வைத்தார். இம்முகாமில் கல்வி அதிகாரி செண்பகராஜன் அலுமை மேம்பாடு கொடுத்து பயிற்சி அளித்தார்.
மேலும், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி அரசு வேலை வாய்ப்பு திட்டங்கள் பற்றியும் சமூகப்பணியாளர் டேனியல், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
இம்முகாமில் 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் மற்றும் சூரியகுமார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் மஹிமா நன்றியுரை கூறினார்.