
மதுரையில் குழந்தைகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக South Indian Superkidz நிகழ்ச்சி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சவுத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்னும் கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.
இதில் 18ற்கும் மேற்பட்ட கலைத்திறனை வெளிக்காட்டும் போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் டாக்டர் தே தேவ் ஆனந்த் அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம் செயலர், SVS சுரஜ் (Event Title Sponsor) மற்றும் மேலும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.