
உலக ஈரநில தினம் முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கி பேசினார்.
மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு போன்ற இயற்கை பாதுகாப்பு குறித்து பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி வாசித்து மாணவர்களின் மனதில் பதியும் வகையில் சொல்ல வைத்தார்.
நிகழ்ச்சியில் விடுதி பொறுப்பாளர் கார்த்திகேசன் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கரங்களால் மரக்கன்று நடப்பட்டது.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.