
மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரின் 440 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், நாயுடு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் அவரது சிலைக்கு வி.ஆர் கவரா தனியார் அறக்கட்டளை நிறுவனரும், வழக்கறிஞருமான அஜய்குமார் ராகுல் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் செல்வராஜ், செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்