
நடிகை ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடந்தது*
மதுரை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் 300 புதிய வீடுகள் கட்டும் டைட்டன் சிட்டி திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இது பற்றிய விவரம் வருமாறு ஜெயபாரத் ஹோம்ஸ் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.
ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பி ஜெயக்குமார் தலைமை தாங்கினார் நடிகை ஆண்ட்ரியா இந்நிகழ்வில் நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார்.
ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குனர் நிர்மலா தேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் சகோதரர்கள் அழகர் முருகன் செந்தில் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர் ஜெயபாரத் ஜெயக்குமார் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஜெயக்குமார் பேசியதாவது
நாங்கள் கட்டுமானத்துறையில் கடந்த 27 வருடங்களாக இருந்து வருகிறோம், 3வது தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம், ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கி 25 வருடத்திற்கு
மேலாகிறது. மதுரை மற்றும் கோயம்புத்தூரில் எங்களது நிறுவனம் சார்பில் 6000 திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம்.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித் தந்து கட்டுமானத்துறையில் ஒவ்வொருவரும் பாராட்டுகிற விதமாக வீடுகளை கட்டித் தருகிறோம் என்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் வழக்கம்போல ஆதரவு தந்திட வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூபாய் 59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம்.
இசை நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.