
அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே ஸ்ரீ சுமதிநாத் ஜெயின் கோவில் பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் 4.2.23 அன்று நடைபெற்றது. மூலவர் சுமதிநாத், ஆதிநாத், சம்பவநாத் மற்றும் இதர பகவான்களுக்கு, ராஷ்ட்ரசந்த் ஶ்ரீ பத்மசாகர் சுரிஜியின் பிரதான சீடரான ஶ்ரீ வர்தமான் சாகர் சுரிஜியின் பொற்கரங்களால், கல்யாண பத்ம சாகர்ஜி, தீர்த்தநந்தன் விஜய்ஜி மற்றும் சாது சாத்விகள் தலைமையிலும், மதுரையில் உள்ள அனைத்து ஜெயின் சமூக மக்கள் முன்னிலையிலும் இனிதே நடைபெற்றது.