
இந்நிகழ்வில் ஆடிட்டர் திருமதி ரோசலின் மார்டினா மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து சிறப்புரையாற்றி, பட்ஜெட் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் சுருளி, பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜசேகரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் கீர்த்திராஜ் நன்றியுரை கூறினார்.