மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ்,அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஜெ.சி.ஐ மதுரை டெம்பிள் சிட்டி தலைவர் கண்ணன், இறைவன் ஸ்ரீ எம்ஜிஆர் பக்தர்கள் குழுவை சேர்ந்த தமிழ்நேசன், கவுன்சிலர் குமரவேல், மன்ற செயலாளர் சுரேந்திரன், இயக்குனர்கள் மோகன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.