மகாத்மா காந்தி 75 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மண்டல தலைவர் எஸ்.எம் நாகராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் வைகை பத்மநாபன், தொழிற்சங்க மாநில பொருளாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் பகவதி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் சாலை.பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.