Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் / காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்.!!
MyHoster

காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்.!!

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள்.

நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் முழு திருவுருவ சிலைக்கு
தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் கீழ் இயங்குகின்ற காந்திய சிந்தனை கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி, அருங்காட்சியக செயலாளர் நந்தா ராவ், பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மற்றும்
இத்தாலி நாட்டில் இருந்து வந்த மாசிலோனா குடும்பத்தினர் மற்றும் லோரா உள்ளிட்ட சுற்றுலா பயணிகள்,
பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதேபோல, ஜப்பான் நாட்டு புத்த பிட்சு மஸ்தாவோ இஸ்தானி காந்தி சிலையின் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதை செய்தார். தொடர்ந்து ஜப்பான் மொழியில் காந்தியை போற்றும் விதமாக இசைக்கருவி இசைத்தவாறு பாடல் பாடினார்.

தொடர்ந்து காந்தியின் நினைவு தினம் இரு வார தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் இன்று தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்க்கக்கூடாது என உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இதில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செய்யப்பட்டு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES