
மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட தொழில் மையம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்திய மனித நேய வார விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினர்.
பெட்கிராட் தலைவர் சுருளி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர்கள் ராஜசேகரன், சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் துவக்க உரையாற்றினார். மாவட்ட தொழில் மைய துணை பொது மேலாளர் திருமதி ஜெயா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உதவி இயக்குனர் என்.எஸ்கிருஷ்ணன் மனிதநேயம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் பெட்கிராட் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பயிலும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.