
சென்னையில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் வேணுகோபால் மற்றும் செயலாளர் மில்ட்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 2-வது மாநில அளவிலான சிலம்பாட்ட சண்டை போட்டியில் பங்கேற்ற, மதுரை வி.கே.எஸ் சிலம்பம் யோகா தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் 10-தங்கம்,3-வெள்ளி, 3-வெங்கலம் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வி.கே.எஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர் டாக்டர் சண்முகவேல் உள்பட பலர் பாராட்டினர்.