முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சோலை அழகுபுரம் 3-வது தெருவில் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அதிமுக பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான முருகேசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு 82-வது வட்டக் கழக செயலாளர் பி.ஆர்.சி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கருப்பையா முன்னிலை வகித்தார்.
இதில் இறைவன் ஸ்ரீ எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழுவை சேர்ந்த தமிழ்நேசன் மற்றும் பாலு, ஞானமணி, டிரைசைக்கிள் பாலு, சண்முகம், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.