
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையால் நடத்தபடும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் இருந்து 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வி. விஷ்ணு, ஏ.அஸ்வந்த் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆர்.பி.குமரன் தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்து இம்மாவட்டத்திலிருந்து மாநில போட்டிக்கு கலந்துக்கொள்ள உள்ளனர். மாநில போட்டியானது ஜனவரி 29 முதல் 31 வரை சிவகங்கை மாவட்டம் சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தபட உள்ளது. இம்மாணவர்களை பள்ளியின் முன்னாள் செயலர் எஸ். பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் எஸ். இராமகிருஷ்ணன், பள்ளி குழுத்தலைவர்
வி.சொக்கலிங்கம் , பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள்
எஸ்.முரளீதரன் ,
என்.துளசிரங்கன்,
ஏ.வரதராஜன் , உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி ,
பி.மார்கண்டன் ,
எஸ்.சக்திவேல், ச.ஹரிஹரன்,
ஆர்.ராகேஷ் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், அலுவலக , மாணவர்கள் வாழ்த்தினார்கள்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்