பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வராக வேண்டும் என வேண்டுதலுடன் அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்த பாஜக மதுரை நிர்வாகி.!!

விரைவில் வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக வேண்டும் என்று வேண்டுதலுடன் மாலை அணிந்து முருகனின் ஆறுபடை வீடுகளிலும் பாஜக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வேங்கை மாறன் என்பவர் தரிசனம் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:-. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறது. பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அவர் தலைமையிலான பாஜகவில் தினமும் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.
இன்றைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக பாஜக கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய அவரால் மட்டுமே முடியும்.

எனவே அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்கு அவர் ஏராளமான சேவை செய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம், 2-ஆம் படை வீடு திருச்செந்தூரிலும், 3-ம் படை வீடு பழனியிலும், 4-ஆம் படை வீடு சுவாமி மலையிலும், 5- ஆம் படை வீடு திருத்தணியிலும், 6-ஆம் படை வீடு பழமுதிர்ச்சோலை போன்ற ஆறுபடை வீடுகளிலும் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்தேன். எனது வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றி தருவார் என எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.என கூறினார்.