மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாபிவிருத்தி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இந்நிகழ்வில் தெற்கு வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், நாடார் வித்தியாசாலை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி பாய் சுவாமியடியாள், வட்டார வள மைய பயிற்றுநர் உமா மற்றும் தெற்குவாசல் நாடார் வித்யாபி விருத்தி சங்க தலைவர் கணபதி, சங்க துணைச்செயலாளர் அருஞ்சுனைராஜன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.