
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சியில் நடைபெற்று வரும் வேலைகள், நடந்து முடிந்த பணிகள் குறித்து ஊராட்சி செயலர் மனோஜ் குமார் பொதுமக்களுக்கு விவரித்து பேசினார். குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இன்ஜினியர் சோனை, குடிநீர் பராமரிப்பாளர் எம்.ஜி.பாலு, வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், சுகாதார செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்