
2024 ஆம் வருடம் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதனால் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்போதே அதற்கான பணியை தொடங்கிவிட்டனர் பாஜக நிர்வாகிகள்
பாரதிய ஜனதா கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அனைத்து பிரிவுகளுக்கும் நன்றாக பணி செய்யும் புதிய நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை ஆணைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்
அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைப்படி,கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலத் தலைவர் பெப்சி சிவா அவர்களின் ஒப்புதலின்படி, மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் அவர்களின் ஆலோசனைப்படி, பாஜக கலை,கலாச்சார பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக கா.மீனாட்சி சுந்தரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.