
மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக குடியரசு தின விழா டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலும், டாக்டர் ராகவன் முன்னிலையிலும் நடைபெற்றது.
திருஞானசம்பந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பதஞ்சலி ஹரிஹரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்வில் முருகன், பூமிராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்