
மதுரை செல்லூர் கீழத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மேயர் இந்திராணி பொன்வசந்த், கோ.தளபதி எம்.எல்.ஏ, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி .வி.கதிரவன், கவுன்சிலர் லோகமணி, கும்பாபிஷேக சர்வ சாதகர் மீனாட்சிசுந்தர குருக்கள், ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவில் நிறுவனர் சிவன் அடிகளார் ராஜ் சுவாமிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.