Wednesday , February 1 2023
Breaking News
Home / உலகம் / ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 18 வது தேசிய திரளணியில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பிய மேலூரை சேர்ந்த சாரணர் மற்றும் சாரணியர்கள்.!
MyHoster

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 18 வது தேசிய திரளணியில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பிய மேலூரை சேர்ந்த சாரணர் மற்றும் சாரணியர்கள்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 18 வது தேசிய திரளணியில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பிய மேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த சாரணர் மற்றும் சாரணியர்கள்

பதினெட்டாவது தேசிய திரளணி ராஜஸ்தான் மாநிலம் ரோஹித் பாலியில் கடந்த நான்காம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது

இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சாரண சாரணியர்கள் கலந்து கொண்ட நிலையில்

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து

9சாரணர்கள் (ஆண்கள்) 8 சாரணியர்கள் டபெண்கள்) – 2 பொறுப்பாசிரியர்கள் என மொத்தம் 19 நபர்கள் கலந்து கொண்டனர்

தேசிய அளவில்
பல்வேறு பிரிவுகளின் கீழ் 19 வகையான போட்டிகள் நடைபெற்றது

இந்தப் போட்டியில் மதுரை மேலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உட்பட மேலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து சென்ற பிற தனியார் பள்ளி மாணவ மாணவிகளும் பரிசுகளை வென்றனர்

இந்த நிலையில் இன்று மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில்

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்கள்

மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மேலூர் பாரத சாரண சாரணிய இயக்க முதன்மை ஆணையாளர் திருமதி முத்துலட்சுமி

மேலூர் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கச் செயலாளர் செந்தில்குமார்

மற்றும் மாவட்ட பயிற்சியாளர் எபினேசர் சந்திரகாசன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில்

சாரண சாரணியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்

முன்னதாக
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா பேசுகையில் சக மாணவர்கள் ராஜஸ்தானை மேப்பில் மட்டுமே பார்த்து வந்த நிலையில் உங்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது பள்ளி பருவத்தில் பிற பகுதிகளுக்குச் சென்று எவ்வாறு பயிற்சி பெறுவது ஒழுக்கமாக எப்படி நடந்து கொள்வது நண்பர்கள் மத்தியில் எவ்வாறு குழுவாக இணைந்து போட்டிகளில் வெற்றி பெறுவது என்பன குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பெற்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பங்கேற்றுமைக்கான வழங்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்

தொடர்ந்து சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் என அனைவரும் ஒரு சேர குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்த பதினெட்டாவது தேசிய அளவிலான திரளணி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட மேலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பிற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டது பாராட்டுதலுக்குரியது

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES