Home/உலகம்/இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அசெஞ்சர், மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.!
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அசெஞ்சர், மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.!
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அசெஞ்சர் நிறுவனம், மதுரை பெட் கிராட் நிறுவனத்தோடு இணைந்து இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இப்பயிற்சியில் சணல் பை, கைவினைப் பொருட்கள், பினாயில் மற்றும் சோப்பு தயாரித்தல், காய்கறிகள், பழங்கள் பதப்படுத்துதல் மற்றும் திணை உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா எஸ்.எஸ் காலனியில் உள்ள தாய் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். விழாவில் இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். பின்னர் பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்ட கோவில்பாப்பாக்குடி பாண்டீஸ்வரி மற்றும் அவர்களோடு இணைந்து தொழில் தொடங்கி உள்ள மாணவிகளுக்கு இலவசமாக தையல் மிஷின்களையும் அவர்கள் வழங்கினார்கள். மேலும் கண்காட்சியில் வைத்திருந்த பொருட்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் KVIC இணை இயக்குனர் அன்புச்செழியன், திட்ட இயக்குனர் காளிதாசன், தலைமை மேலாளர் சாம் ஜெயக்குமார், இ.டி.ஐ.ஐ திட்ட அலுவலர்கள் டாக்டர் கே.திருப்பதி, பி.கார்த்திகேயன், அரசு, எம்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ணவேணி, வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சாராள்ரூபி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் பெட்கிராட் தலைவர் சுருளி, பொதுச்செயலாளர் அங்குச்சாமி, துணைத் தலைவர் சுசீலா குணசீலி, செயலாளர் ராஜசேகரன், துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங், மும்பை ஆர்.கண்ணன், அமைப்புசாரா நல வாரியம் ஏ.பி.குமார், மற்றும் நிவேதா, செல்வி, விஜயவள்ளி, முத்துச்செல்வி, பாண்டிமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.