
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தானப்பமுதலி தெருவில் பெட்கிராட் வீடற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, இ.டி.ஐ.ஐ இயக்குனர் ராமன் குஜ்ரால் மற்றும் அசெஞ்சர் கீர்த்தனா சேஷாத்ரி ஆகியோர் வேட்டி, சட்டை, சேலை மற்றும் போர்வைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் கிருஷ்ணவேணி, கௌரவ ஆலோசகர்கள் மும்பை ஆர்.கண்ணன் மும்பை கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் காப்பாளர் இந்திரா பியூலா செய்திருந்தார்.