
மதுரை குரு தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பாஜக காளவாசல் மண்டல் கிளைத்தலைவர்கள் அறிமுக கூட்டம் மண்டல் அமைப்பாளர் பிச்சைவேல் தலைமையிலும், மண்டல் பொறுப்பாளர் சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் குமார், பொதுச் செயலாளர்கள் வினோத், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி மற்றும் ஆர்.கே.பிரகாஷ், கோச்சடை ரங்கராஜ், ராதா கிருஷ்ணன், முருகேசபாண்டி, ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்