
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தத்தனேரி, பாக்கியநாதபுரம் பகுதிகளில் 22-வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளர் எஸ்.பி சேகர் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஏழை,எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன்,மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா,வட்டக்கழக துணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர்கள் தங்கப்பாண்டி, விருமாண்டி, பிரதிநிதிகள் ஏ.டி.பாண்டி, தண்டபாணி, பாண்டிச்செல்வி, மனோகரன் மற்றும் திராவிட செண்பகமுத்து, ஐ.டி விங் காசிநாதன், ஆட்டோ ராஜா உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்