
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் பாஜக S.T அணி மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் பழங்குடி இந்து மக்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மண்டல் பார்வையாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். பரவை மண்டல் தலைவர் ஜெகநாதன், மருத்துவ பிரிவு மாவட்ட பொறுப்பாளர் கரண் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பிரிவு மாநிலத் தலைவரும், திரைப்பட இசை அமைப்பாளருமான தீனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், திரைப்பட விநியோகஸ்தருமான வெங்கடேஸ்வரன் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் குமார், பொதுச்செயலாளர் வினோத், விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி, எஸ்.டி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மண்டல தலைவர் அழகர்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.