
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் கிராம ஊராட்சி சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், செம்பனார்கோயில் வேளாண்மை உதவி இயக்குனர் ச. சுப்பையன், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, மேலையூர் ஊராட்சி மன்றத்தலைவர் நளினிராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்