
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, அகில பாரத இந்து மகா சபா சார்பாக, மதுரை பாத்திமா கல்லூரி அருகே ஒளியூட்டும் கைகாப்புகள், தோல் பைகளில் ஒளியூட்டும் ஸ்டிக்கர்கள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகளை, மாநில இளைஞரணி செயலாளரும், மண்டலத்தலைவருமான ராஜா வழங்கினார்.
இதில் அர்ச்சகர் பேரவை தெய்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் ஜனனி பாஸ்கர், சபரி, சரவணா, செந்தில்குமாா், சசிகுமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.