
மதுரை மாவட்டம் பரவையில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா, சங்கத்தலைவர் வி.பி.ஆர்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
மேலும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் ஊமை விழிகள் திரைப்பட இயக்குனர் அரவிந்த்ராஜ்,சங்க ஆலோசகர் முகமதுபக்ஸ், பொதுச்செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சின்னமணி, இணைச் செயலாளர் சோனைமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.