
சிவகங்கை மாவட்டம் அலவாகோட்டை பஞ்சாயத்து, அம்மச்சிப்பட்டி கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியாக, அம்மச்சிப்பட்டி மண்வாசனை கிராம உறவுகள் சார்பாக 500 க்கும் மேற்பட்ட இலுப்பமரம், பூவரசமரம்,மலை வேம்பு மற்றும் பலாமரம், சப்போட்டா போன்ற பழ மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அம்மச்சிபட்டி முத்து மற்றும் இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கருப்பையா, சுப்பிரமணியன், வீரையா, பில்லப்பன், மதுரை முத்துராமன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.