
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முனைவர். பிச்சைவேல் மற்றும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோ.புதூர் காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆதரவற்ற ஏழைகள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கைரேகை ஆட்டம் திரைப்பட இயக்குனர் வீரமணி பிரபு மற்றும் திரைப்பட குழுவினர் ரமேஷ்காந்தி, தங்கபாண்டி ஜெரோம் மற்றும் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, துணைத் தலைவர் மணிகண்ட பிரபு, இணைச் செயலாளர் பிரகாஷ்,
வளைகுடா வாழ் தமிழர்கள் நல சங்கம் துணைச் செயலாளர் ஜெயபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.