
மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது
சமத்துவ பொங்கல் ஆக நடைபெற்ற இந்த விழாவில் பிதாமகன் திரைப்பட புகழ் ஐயர் மற்றும் தேவாலயத்தில் இருந்து சிறப்பு பிரார்த்தனை வழங்குவதற்காக வந்த பாதிரியார் மற்றும் இஸ்லாமிய மதம் சார்ந்த நபர் என அனைவரும் கலந்து கொண்டு சமுதாய பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்
இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜன். தந்தையும் இயக்குனருமான கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் துணை நட்சத்திரங்களாகவும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கோலாலமாக கொண்டாடினர்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மதுரை கருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாடலாசிரியர் விருமன் படத்தில் வந்த கஞ்சா பூ கண்ணால பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் பொங்கல் பண்டிகை குறித்து பேசுகையில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு விழாவாக இந்த விழா பார்க்கப்படுகிறது எனவும் அங்கு வந்திருந்த விவசாயி காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார்
நடிகர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை பேசுகையில் நம்முடைய பாரம்பரிய விழாக்களில் ஒன்று இந்த பொங்கல் விழா அதே போன்று மண் சார்ந்த விஷயங்களையும் தமிழர்களுக்கான ஒரு களம் கொண்ட கதைகளிலும் தொடர்ந்து தான் நடிப்பேன் என்றும் தெரிவித்தார்