
என்.எஸ்.எஸ் மாணவிகளை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் விருது வழங்கி கௌரவித்தார்.
மதுரை மாவட்டம் அருகே உள்ள பூலாம்பட்டி, மாலைப்பட்டி மற்றும் வெளிச்சநத்தம் ஆகிய கிராமங்களில், மதுரை லேடி டோக் கல்லூரி (என்.எஸ்.எஸ்) நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் ஆறு நாட்கள் முகாமிட்டு, மருத்துவ முகாம், கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் இளம் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற சமூகப் பணிகளை செய்தனர்.
மேலும் கிராமத்தில் தூய்மை பணிகளையும் மேற்கொண்ட கல்லூரி மாணவிகளை கிராம பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

சமூக அக்கறையோடு நாட்டு நலத்திட்ட பணிகளை மேற்கொண்ட என்.எஸ்.எஸ் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பெட்கிராட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்கள், சிறந்த சமூக பணிக்கான விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில்
லேடி டோக் கல்லூரி பேராசிரியர் ஜெனட், ஜீவா ஆனந்த், டாக்டர் தீபா மற்றும்
பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குச்சாமி, செயலாளர் ராஜசேகர்,துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் உள்பட பலர் பங்கேற்றனர்.