
மதுரையில் தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சி திட்டம் மற்றும் பெட்கிராட் இணைந்து கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெட் கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார்.
பெட் கிராஃப்ட் தலைவர் சுருளி பொருளாளர் கிருஷ்ணவேணி செயலாளர்கள் ராஜசேகரன், சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனரும்,திட்ட அலுவலருமான காளிதாசன், உதவி திட்ட அலுவலர்கள் சின்னத்துரை, வெள்ளப்பாண்டி ஆகியோர் தையல் உபகரணங்களை வழங்கினார்கள்.
இதில் சமுதாய அமைப்பாளர் செல்லம்பட்டி பூங்கொடி உள்பட மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.