
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சாப்டூரில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்டம் சார்பாக மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.தேவர், மாநில துணைத்தலைவர்கள் மணி முத்தையா, வலசை முத்துராமன் ஜி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி.நரசிங்கப்பெருமாள் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜரத்தினம் வாழ்த்துரை வழங்கினர். தெற்கு மண்டல் தலைவர் இளங்கோவன் நன்றியுரை கூறினார்.