
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி, நகராட்சி தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகுடீஸ்வரன், செயலாளரும் கூட்டுறவு சங்க தலைவருமான கே.கண்ணன், பொருளாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி ஐ டி யு மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.