
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முடிதிருத்தும் சமுதாய மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
முடி திருத்தும் சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வசித்து வருகிறோம். சிக்கம்பட்டி பகுதியில் இலவச
வீட்டுமனை பட்டா வழங்க கோரி உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற்படுத்தப்பட்டோர் துறை அதிகாரி ஆகியோரிடம் விண்ணப்பம் செய்து சுமார் 14 மாதங்களுக்கு முன்பு மனு வழங்கினோம்.
இதற்கு முன்பு எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 1987 ஆம் வருடம் 74 வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதே ஊரில் வசிக்கும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. அதனால் எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து மனு வழங்கினோம்.
ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.