
இந்நிகழ்ச்சிக்கு சிவயோகி சிவசண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெகன்நாத், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆத்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மாவட்ட தலைவர் சண்முகவேல், மருத்துவர்கள் ஆர்த்தி, பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் நீலன், காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிக்காளை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆத்ம யோகாலயா செயலாளர் ஸ்ரீதேவி, நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் விஜயா ஆகியோர் செய்திருந்தனர்.