
தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்க கோரி, சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகில் பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பொது மக்களுக்கு தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் ஸ்ரீதேவி, திருநாவுக்கரசு, சுந்தரலிங்கம், ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.