
புரோட்டாவில் புதுமை புகுத்தி வரும் மதுரையில் பிரபல அழகரடி முக்குகடை கே.சுப்பு ஹோட்டல் 2023 ஆம் வருட புத்தாண்டை முன்னிட்டு, 2023 எண் வடிவில் புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் 60 மதிப்புள்ள நான்கு புரோட்டா வெறும் 23 ரூபாய்க்கு வழங்கினர். இது மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஏற்கனவே மஞ்சப்பை வடிவிலான புரோட்டாவை இதே ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.