
மத்திய ஜவுளி அமைச்சகம், மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையம் மற்றும் பெட்கிராட் டிரஸ்ட் சார்பாக ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மகாலில், அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டேம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பெட் கிராப்ட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், தெற்கு மண்டல மேலாளர் பிரபாகரன், உதவி இயக்குனர் ரூப் சந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்து இருந்தனர். இந்த கண்காட்சியில் வாழைநார், கற்றாழை நார்களால் ஆன ஆடைகள், மண்பாண்டம், பித்தளை, சணல் கைவினை பொருட்கள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கண்காட்சி ஜனவரி 7ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என்பது கூடுதல் சிறப்பு.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் டிரஸ்ட் பொதுச்செயலாளர் எஸ்.அங்குச்சாமி, பொருளாளர் எஸ்.கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் மார்ட்டின் ஆகியோர் செய்திருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் குமார்