
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளரும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் 2023 ஆம் வருட காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் பெரியநாயகம், பூமிராஜா, ராமலிங்கம், குணாஅலி, நாகேந்திரன், தங்ககுமார், அழகர், பாலு, குமார், பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.