
மதுரையில் வி.கே.எஸ் சிலம்பம், யோகா தற்காப்பு அறக்கட்டளை, தென் இந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் மதுரை மாவட்ட மாணவரும், நாகசிவா பாலிடெக்னிக் கல்லூரி மாணவருமான அரவிந்தன் இரட்டை கம்பில் நான்கு முனைகளிலும் கூர்மையான கத்தியை வைத்து கொண்டு 10-மணி நேரம் சிலம்பம் சுற்றியவாரும், அதே போல் கடச்சனேந்தல் பி.என்.மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் மாணவி ரஷ்கீதா 18.000 ஆணி படுக்கை மீது ஏறி நின்று கொண்டு 8- மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ரோட்டரி இன்டர்நேஷனல் சேர்மனும், தங்கமயில் ஜூவல்லரி தலைமை மேலாளருமான விஸ்வநாராயண் மற்றும் சைக்கி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கி கௌரவித்தனர்.
உலக சாதனை படைத்த மாணவர்களை சோழன் உலக சாதனை புத்தகத்தின் தலைவர் நீலமேகம் நிமலன், மாவட்ட செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், வி.கே.எஸ் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசிரியர் சிலம்பம் சண்முகவேல், சுந்தர், முனீஸ்வரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மைய வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூக சேவகர் அண்ணா நகர் முத்துராமன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.