
மதுரையில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் மற்றும் ஆரப்பாளையம் மண்டல் கிளை தலைவர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இ.எஸ்.ஐ மண்டல் அமைப்பாளர் செல்லத்துரை, இ.எஸ்.ஐ மண்டல் பொறுப்பாளர் முத்து வழிவிட்டான், ஆரப்பாளையம் மண்டல அமைப்பாளர் பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், பொதுச் செயலாளர்கள் சு.பாலகிருஷ்ணன்,வினோத், மத்திய தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார், ஓ.பி.சி அணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலன் ரேடியோஸ் ஆர்.பாலமுருகன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, மீனவரணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.