
சென்னை அமைந்தகரையில் மக்கள் ஆணையம் மிஸ்டர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மக்கள் ஆணையம் நிறுவனர் & ஆசிரியர் முத்தையா தலைமை தாங்கினார். அம்மு முத்தையா குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி டாக்டர் டி.என். வள்ளிநாயகம் அவர்கள், தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமை கழகம் நிறுவனத்தலைவர் ஜெயபாலன், டாக்டர் சிவக்குமார், டாக்டர் வாசுகி சுப்ரமணியன், திரைப்பட நடிகர் மகாநதி சங்கர் ,ஜூபிடர் ரவி, வை.பாண்டிதுரை, முனைவர் சிங்க தமிழச்சி, மூத்த பத்திரிகையாளர் சீனிவாசராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.