
மதுரை பாத்திமா நகரில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எம் வினோத் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தில் பிறக்கப் போகும் புத்தாண்டை வரவேற்கும் வண்ணமாக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவாஜி கணேசன் போல் வேடமணிந்த கலைஞர் உட்பட துணை நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த செம்பி, புலிக்குத்து, பாண்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக புத்தாண்டு பாடல்களுக்கு ஆட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
எத்தனை காலங்கள் ஆனாலும் காலத்தால் அழியாத புகழுடைய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடைய நடிப்பில் வெளிவந்த பாடலுக்கு சிவாஜி கணேசன் வேடமணிந்த கலைஞர் நடனமாட அவரோடு இணைந்து இன்றைக்கு இருக்கக்கூடிய நடிகர்களுடைய பாடல்கள் வரை நடிகர்கள் இணைந்து பாடியது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தது
தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எம் வினோத் கேக்குகளை அனைவருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்தை கூறினார்.
இவ்விழாவில் அட்சயா,தேவகி,
சுலோச்சனா,கீர்த்தனா, மீசை முருகன்
வீரா,மணி,பழனிவேல்,தேவி,
பிரியா,லட்சுமி, சங்க மேலாளர் பாலா, செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன்,
நாட்டிநவனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.