
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கட்டிடத்தில் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தல் மாநில தேர்தல் அலுவலர் திருச்சி செந்தில் தலைமையிலும், உதவி தேர்தல் அலுவலர் ராஜன் முன்னிலையிலும் நடைபெற்று புதிய நிர்வாகிகள் மதுரையில் பதவி ஏற்று கொண்டனர்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளராக சரவணகுமார் மாநில தலைவராக பூவலிங்கம், மாநில பொதுச் செயலாளராக சங்கரசபாபதி, மாநில பொருளாளராக முருகன், மாநில துணைத்தலைவராக ரஜினிகாந்த், மாநில மகளிரணி தலைவராக சாரதா, மாநில மகளிரணி செயலாளராக முத்துச்செல்வி, மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இந்துசேனன், மணிவண்ணன், நாகராஜூ, ஈஸ்வரன், சின்னத்துரை உள்பட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.