Monday , June 5 2023
Breaking News
Home / Politicians / Jothimani / விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு – ஜோதிமணி எம்.பி
MyHoster

விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு – ஜோதிமணி எம்.பி

முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்திரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொரு ஆண்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

இம்முறையும் எமது விவசாயிகளின் கரும்பு தமிழகமெங்கும் இனிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என பதிவிட்டுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES