
மதுரையில் மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பின் 4-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
(2023) ஆண்டிற்கான காலண்டரை மிராஜ் டிராவல்ஸ் முஸ்தபா வெளியிட்டார்.
சங்க செயலாளர் ராமநாதன் வரவேற்று பேசினார்.
தலைவர் முரளி
சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் பெட்கிராட் நிறுவனர் சுப்புராம், சங்க துணைத் தலைவர் முருகேசன், புலவர் சங்கரலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வின் போது அர்ஜூனா விருது பெற்ற மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் மற்றும் சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்,
மேலும் ஏழை மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் சீனி உமர் நன்றியுரை கூறினார்.