
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, பதிவு மண்டலங்களில் மிக அதிகமாக 102 சார்பதிவாளர் அலுவலகங்களைக் கொண்ட மதுரை பதிவு மண்டலத்தை நிர்வாக நலன் கருதி இரண்டாகப் பிரித்து புதிதாக இராமநாதபுரம் பதிவு மண்டலம் உருவாக்கத்தை தொடங்கி வைத்து, 5 புதிய சார் பதிவாளர் அலுவலகங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் காதக்கிணறு பகுதியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தையும் அமைச்சர் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் திருமதி ஜோதி நிர்மலா சாமி,பதிவுத்துறை தலைவர் சிவனருள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன்,மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சூரியகலா கலாநிதி, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, காதக்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்